சீனாவினால் இலங்கை இராணுவத்துக்கு விசேட பயிற்சி
சீனாவினால் இலங்கை இராணுவத்துக்கு இராணுவ தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. தற்கான ஒப்பந்தம், அண்மையில் சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீன அரசாங்கத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டதாக பீஜின் போஸ்ட் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இரு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சுகளுக்கிடையில் உள்ள புரிந்துணர்வின் அடிப்படையில், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்க சீனா முன்வந்துள்ளதாக வெளிவிவகாரச் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான நிதி உதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ள நிலையில், மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவித்த வெளிவிவகார செயலாளர், இராணுவ தொழில்நுட்பப் பயிற்சி வழங்குவதற்கான விவகாரம் மேற்படி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply