பல்கலைக்கழக கல்லூரிகள் 13 நிறுவ நடவடிக்கை – டலஸ்
இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகபெரும 13 பல்கலைக்கழக கல்லூரிகளை நிறுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த பல்கலைக்கழக கல்லூரிகளின் நிர்மாண பணிகளுக்காக 3173 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பெல்வூட் அழகியற்கலை மையத்திலும் சபுகஸ்கந்த தொழில் பயிற்சி மையத்திலும் இரண்டு பல்கலைக்கழக கல்லூரிகள் நிறுவப்படும். ஜயவர்த்தனபுர வைத்தியசாலை வளாகத்தில் சுகாதார கல்விக்கான பல்கலைகழக கல்லூரி நிறுவப்படும்.
அம்பாறை தொழில்நுட்ப கல்லூரியில் தேசத்திற்கு மகுட கண்காட்சிக்காக நிறுவப்பட்ட புதிய கட்டிடங்களில் பல்கலைக்கழக கல்லூரி நிறுவப்படும்.
இதற்கு மேலதிகமாக 09 பல்கலைக்கழக கல்லூரிகளை இரத்மலான, குளியாபிட்டிய, தலல்ல, பத்தேகம, கட்டுநாயக்க, அநுராதபுரம், பொரல்ல, கட்டுபத்த மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நிறுவ அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் டலஸ் அழக்பெரும அமைச்சரவைக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply