ஐபிஎல் சூதாட்ட வழக்கு: ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 19 பேருக்கும் பிணை

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைதான இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர், மற்றும் இடைத்தரகர்கள், புக்கிகள் என்று மொத்தம் 19 பேருக்கு டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பிணை வழங்காமல் இருக்கும்படியான போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிமன்றம் கூரியதாகத் தெறிய வருகிறது. நடந்து முடிந்த 6வது ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேர், ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரங்கள், மற்றும் தொலை பேசி உரையாடல்கள் கிடைத்துள்ளதாக கூறி, டெல்லி போலீசார் மூவரையும் அதிரடியாக கைது செய்து விசாரித்து வந்தனர்.

இவர்களோடு, இடைத் தரகர்கள், புக்கிகள் என்று பலரும் கைதாகி மொத்தம் 19 பேர் டெல்லி பொலிசாரின் விசாரணை வளையத்துக்குள் இருந்தனர். டெல்லி பொலிசார் இவர்களை இரண்டு முறை விசாரணை காவல் முடிந்தும் கூட மறுபடியும் விசாரணை காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ரஹிமுகும் இந்த சூதாட்டத்தில் தொடர்புள்ளது என்று தெரிய வருவதாகவும், ஸ்ரீசாந்த் உள்ளிட்டவர்களை தீவிரவாத தடுப்பு பிரிவு குற்றம் முதலிய மூன்று குற்றங்களின் அடிப்படையில் சிறையில் அடைத்தால், மிக கடுமையான தண்டனைகள் கிடைக்கும் என்றும் டெல்லி பொலிசார் கூறிவந்தனர்

இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஸ்ரீசாந்த் உட்பட மற்ற  இரண்டு வீரர்கள், மற்றும் இடைத் தரகர்கள் புக்கிகள் என்று 19 பேருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளதாகவும், இவர்களின் மேல் குற்றம் சுமத்தும் அளவுக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் டெல்லி நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply