மலையகத்திலும் கடும் மழை, காற்று

நேற்றிரவு முதல் பெய்து கடும் மழையினாலும் கடுங்காற்றினாலும் ஹட்டன் – டிக்கோயா நகரசபைப் பகுதிகளில் சில பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இந்த நகரசபையின் தலைவர் ஏ.நந்தகுமார் தெரிவித்தார். கடும் மழை வெள்ளத்தினால் டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததினால் டிக்கோயா நகரப்பகுதி குடியிருப்பாளர்கள் பலர் பாதிப்புக்கு உள்ளாகியள்ளனர்.  இந்த நிலையில் தொடர்ந்து கடும் மழை பெய்வதால் டிக்கோயா நகரில் வெள்ளப் பாதிப்புக்கள் இடம்பெறக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

ஹட்டன் காமினிபுரப் பகுதியில் மண்சரிவு அபாயமுள்ளதால் இப்பகுதி குடியிருப்பாளர்களும் அவதானமாக செயற்படுமாறும் ஹட்டன் – டிக்கோயா நகர பிதா ஏ. நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பெய்து வருகின்ற அடைமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நீரேந்தும் பகுதிகளில் பெய்து வருகின்ற அடைமழையினால் லக்ஷபாண மற்றும் கெனியன் ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக களனிகங்கையின் இருமருங்கிலும் வாழுகின்ற மக்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply