அதிகாரங்களை குறைப்பதற்கு ஆதரவளிக்க முடியாது: தெரிவுக்குழு குறித்து கூட்டமைப்பு கருத்து
அதிகாரங்கள் குறைக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கோ செயற்பாட்டுக்கோ தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஒருபோதும் துணைபோகாது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஆராயப்படவுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றபோதிலும் அது குறித்த உத்தியோகபூர்வ அழைப்பிதழ் எதுவும் கூட்டமைப்பிற்கு கிடைக்கவில்லையென்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் ஆளும்தரப்பினரால் முன்னெடுக்கப்படுகின்றன. பொலிஸ் மற்றும் காணி உள்ளிட்ட முக்கிய அதிகாரங்கள் சிலவற்றை சவாலுக்கு உட்படுத்தி அவற்றை பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்குள் திருத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மேற்படி தெரிவுக்குழு தொடர்பில் எவ்விதமான தகவல்களும் எமக்கு அறிவிக்கப்படவில்லை. அதேபோன்று மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கவும் போவதில்லை என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply