மேற்கு வங்கத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 55 பேர் மாயம்

மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் இன்று காலை 7.45 மணியளவில் கங்கை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த ஒரு படகு கவிழ்ந்தது. தலைநகரான கொல்கத்தாவில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் மாணிக்சக் என்ற பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. வேகமான காற்று வீசியதால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த படகில் 70 பேர் பயணம் செய்தனர்.

அவர்களில் 15 பேர் நீந்தி கரையை அடைந்து உயிர் தப்பினர். மற்றவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அந்த படகில் அதிக அளவில் பெண்களும், கால்நடைகளும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நடந்த இடத்தில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால், மீட்புப் பணிகள் நடைபெறுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே பலர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply