தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா விஜயம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளைய தினம் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றுக் கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இந்தியாவிற்கு நாளை புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் ஆகியோரை கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
மாவை சேனாதிராஜா, எம்.சுமந்திரன், சுரேஸ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பொன் செல்வராசா ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply