சிரியா விவகாரம்: ஜி௮ மாநாட்டில் அமெரிக்க-ரஷ்ய அதிபர்கள் பேச்சுவார்த்தை

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த சண்டையில் இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரில் பொதுமக்கள் மீது அதிபர் படை இராசயன ஆயுதங்களால் தாக்குகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால் போராளிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி அமெரிக்கா உதவும் என்று கூறியது. இதற்கு சவால் விடும் விதமாக சிரியாவின் முக்கிய ஆதரவு நாடான ரஷ்யாவும், சிரியாவிற்கு ராஜதந்திர உதவிகள் மற்றும் ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படும் என்று கூறியது.

இதனால் இரு நாடுகள் இடையே இறுக்கமான நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் வரும் திங்களன்று வடக்கு அயர்லாந்தில் ஜி௮ மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் சந்தித்து பேசவுள்ளனார்.

இந்த சிக்கலான சந்திப்பில் சிரியா பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து வழிமுறைகளை ஆராய்வார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் தனிபட்ட முறையில் நேரில் சந்தித்து பேசுவது இதுவே முதல் முறையாகும். கடந்த 2012-ம் ஆண்டு மேற்கத்திய நாடுகளின் தாக்குதலை முறியடிக்கும் விதமாக ரஷ்யா போர் கப்பல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சன்னி முஸ்லிம் போராளிகளுக்கு அமெரிக்கா, துருக்கி, கதார், சவூதி அரேபியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும், அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யா, ஈரான், லெபனான் ஆகிய நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply