இரான் அதிபர் தேர்தல்: ஹஸ்ஸன் ரூஹானி வெற்றி
இரானிய அதிபர் தேர்தலில் மரபுவாத ஆதரவாளரென்றாலும் மிதவாதியாக அறியப்படும் ஹஸ்ஸன் ரூஹானி வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று நடந்த தேர்தலில் ரூஹானி ஒரு கோடியே எண்பத்தைந்து லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.பதிவான வாக்குகளில் 51 சதவீதத்துக்கும் சற்று கூடுதலான வாக்குகளை ரூஹானி பெறுவதாக இந்த எண்ணிக்கை அமைந்துள்ளது.இம்முறை அதிபர் தேர்தலில் அதிகமான அளவில் மக்கள் திரண்டு வாக்களித்தனர் என்றும் ஓட்டுப்போட பதிவுசெய்திருந்த மக்களில் 71 சதவீதமானோர் வாக்களித்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் கூறுகிறது.
இரண்டாவது இடத்தில் வந்த தெஹ்ரான் நகர மேயர் முகமது பாக்கர் கலிபாஃப் அறுபது லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply