வடக்கில் இராணுவப் பிரசன்னம், காணிப்பிரச்சினை உட்பட பல்வேறு விடயங்கள் தீர்க்கப்படவுள்ளன: டேவிட் கமரூன்

வடக்கில் இடம்பெயர்ந்தவர்கள், காணி ப்பிரச்சினை, இராணுவத்தின் பிரசன் னம் மற்றும் வடமாகாண சபைக்கான அதிகாரங்களை பகிர்ந்தளித்தல் ஆகிய வற்றுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் இன்னும் தீர்க்கப்பட வேண் டியிருப்பதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள டேவிட் கமரூன் வடக்கிற்கான விஜய த்தை முடித்துக்கொண்டு நேற்று ஜனாதி பதியை பண்டாரநாயக்க சர்வதேச மாநா ட்டு மண்டபத்தில் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் சர்வதேச ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறி யுள்ளதாவது:

2013 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தற்போது இலங்கை வந்திருக்கும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் நேற்று மாலை சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

இதன்போது 2013 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விதம் குறித்து திருப்தி வெளியிட்டார். சிலர் முன்மொழிந்ததைப் போன்று இந்த மாநாட்டை பகிஷ்கரிக்கும் எண்ணம் தனக்கு இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று வடக்குக்கு அவர் மேற்கொண்ட விஜயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரித்தானிய பிரதமர் நான்கு வருடங்களுக்கு முன்னர் மோதல் நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து பெருமளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். வட மாகாண சபைக்கு தேர்தல்களை நடத்தியமை நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு மிகச் சாதகமான நடவடிக்கை என வர்ணித்தார். எனினும், இடம்பெயர்ந்தவர்கள், காணிப் பிரச்சினைகள் வட மாகாணத்தில் இராணுவத்தினரின் பிரசன்னம் மற்றும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட வட மாகாண சபைக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்தல் போன்ற விடயங்களுடன் தொடர்புபட்ட பல்வேறு விடயங்கள் இன்னும் தீக்கப்ப டவேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவி த்தார்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் மோதலின்போது சேதத்திற்குள்ளான உட்கட்டமைப்பு புனர்நிர்மாணம் போன்ற விடயங்களில் பாரியளவு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன என விபரித்தார். அரசியல் விவகாரங்களில் இணக்கப்பாட்டை எட்டும் வகையில் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கும் தீர்வொன் றை எட்டுவதற்கும்சம்பந்தப்பட்ட எல் லா கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப் பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply