சிரியாவின் ரசாயன ஆயுதங்களை அழிக்க அல்பேனியா மறுப்பு
சிரியாவில் கைப்பற்றப்பட்ட ரசாயன ஆயுதங்களை அழிக்கும் முயற்சியில் பிற நாடுகளின் உதவியை ஐ.நா நாடியுள்ளது. 1000 மெட்ரிக் டன் எடை கொண்ட இந்த ஆயுதங்களில் கடுகு வாயு மற்றும் நரம்புகளை செயலிழக்கச் செய்யும் சரின் போன்ற வாயுக்களும் உள்ளன. இவற்றை வெளியில் வைத்து அழித்துவிடுமாறு சிரியா கேட்டுக் கொண்டதற்கிணங்க ஐ.நாவும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. ரசாயன ஆயுத ஒழிப்பினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்த அல்பேனிய அரசு நேற்று இதனை மறுத்துள்ளது. நேற்று வெளியிட்ட தொலைக்காட்சி உரையில் அல்பேனிய அரசின் பிரதமர் எடி ராமா அரசின் இந்த முடிவினைத் தெரிவித்தார்.
ஆயுதங்களைத் தங்கள் நாட்டில் ஒழிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமரின் அலுவலகத்திற்கு முன்னால் கூடியிருந்த 2,000 ஆர்ப்பாட்டக்காரர்களும் அரசின் இந்த முடிவை ஆதரித்து உற்சாகக் கோஷம் எழுப்பினர். சிரியாவின் ஆயுதங்களை அழிக்கத் தேவையான கட்டமைப்பு அல்பேனியாவில் இல்லை.
எங்களுடைய சொந்த விஷங்களை சமாளிக்கத் தேவையான ஆயுதங்களே இங்கில்லை. மேலும்,இது குறித்து நேட்டோ,அமெரிக்கா போன்ற எவரின் உத்தரவையும் ஏற்க வேண்டிய கடமை இல்லை என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் கூறினார்.
நேட்டோ அமைப்பில் ஒரு உறுப்பினராக உள்ள அல்பேனியா நாட்டைச் சேர்த்து இதுவரை மொத்தம் மூன்று நாடுகளே தங்களின் ரசாயன ஆயுதங்களின் இருப்பைத் தெரிவித்து வெளிப்படையாக அழித்தன.அமெரிக்கா,ரஷ்யா போன்ற நாடுகளும் தங்களின் ரசாயன ஆயுதங்கள் கையிருப்பை வெளியில் தெரிவித்தபோதிலும் அவற்றை இன்னும் முற்றிலுமாக அழிக்கவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply