முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்(82) டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி ராஜாஜி மார்க் வீட்டில் தங்கியிருந்த அவர் காய்ச்சலால் சோர்வடைந்து காணப்பட்டார். இதனையடுத்து, அவரது உதவியாளர்கள் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அவரை உடனடியாக அனுமதித்தனர்.இதுதொடர்காக அவரது அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘சில வாரங்களாக அதிக சுற்றுப்பயணம் செய்ததால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய டாக்டர்கள், முழுமையாக ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

அவரது இதய துடிப்பு, ரத்த கொதிப்பு போன்றவை சீராகவே உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ஆஸ்பத்திரியில் இருந்து அவர் வீடு திரும்பி விடுவார்’ என்று கூறப்பட்டுள்ளது.

அப்துல் கலாமின் உடல் நலக்குறைவு தொடர்பாக உறுதிபடுத்த முடியாத வேறு சில தகவல்கள் கீழே மயங்கி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply