தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி ஜேகொப் சூமாவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி ஜேகொப் சூமாவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பொது செயலாளர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ்பிரேமசந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையில் இந்த சந்திப்பின் போது, தென்னாப்பிரிக்காவில் முன்வைக்கப்பட்டிருந்த உண்மையை கண்டறியும் மற்றும் மறுசீரமைப்புக்கான ஆணைக்குழு தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான ஆணைக்குழு ஒன்று தொடர்பிலான யோசனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம், தென்னாப்பிரிக்க பிரதமர் முன்வைப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply