நெல்சன் மண்டேலாவால் பேச இயலவில்லை
தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவினால் பேச இயலவில்லை என்று அவருடைய முன்னாள் மனைவி வின்னி மண்டேலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது.நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா, சிகிச்சைக்குப்பின் குணமடைந்துள்ளார். எனினும், மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், வீட்டிலேயே அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரை, 22 மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரால் இப்போது பேச இயலவில்லை. நுரையீரலை சுத்திகரிக்க, அவருடைய வாயில் டியூப்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவருக்கு ஏதேனும் தேவையெனில், சைகைகளாலேயே தெரியப்படுத்துகிறார். எனினும், விரைவில் அவர் பேசத்துவங்குவார் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்று வின்னி கூறினார்.
முன்னதாக, நுரையீரல் தொற்று காரணமாக மூன்று மாத சிகிச்சைக்குப்பின் மண்டேலா, கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply