மாலத்தீவு அதிபராக அப்துல்லா யாமீன் பதவியேற்பு

மாலத்தீவு அதிபராக அப்துல்லா யாமீன் (59) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். அவருக்கு இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது. மாலத்தீவு அதிபர் பதவிக்கு 2ம் கட்டமாக சனிக்கிழமையன்று தேர்தல் நடைபெற்றது. இதில், யாரும் எதிர்பாராத வகையில் அப்துல்லா யாமீன் 51.39 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். முன்னாள் அதிபர் முகமது நஷீத், 48.61 சதவிகித வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.அதைத்தொடர்ந்து தாருபாருகேயில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாலத்தீவின் புதிய அதிபராக அப்துல்லா யாமீன் பதவியேற்றார். துணை அதிபராக முகமது ஜமீல் அகமது பதவியேற்றுக்கொண்டார்.

பின்னர் அதிபர் அப்துல்லா யாமீன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாலத்தீவு பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், நாட்டிற்கு தற்போது ஸ்திரத்தன்மை தேவையாக உள்ளது. நாடாளுமன்றத்தில் எங்களுக்கு சிறந்த ஒத்துழைப்பை நஷீத் வழங்குவார் என்று நான் நம்புகிறேன் என்றார்.

நட்புறவை எதிர்பார்க்கும் இந்தியா: இதற்கிடையே, மாலத்தீவில் அதிபர் தேர்தல் வெற்றிகரமாக நடந்துள்ளதை வரவேற்றுள்ள இந்தியா, புதிய அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

மாலத்தீவுடன் நெருங்கிய நட்புறவை விரும்புதாகவும், அந்நாட்டில் அமைதிக்கும், முன்னேற்றதுக்கும் இந்தியா முழு ஒத்துழைப்பை நல்கும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply