தேசிய இனப்பிரச்சினைக்கு மாகாணசபை முறைமையே சிறந்த தீர்வுத் திட்டம் : டக்ளஸ்

தேசிய இனப்பிரச்சினைக்கு மாகாணசபை முறைமையே மிகவும் சிறந்த தீர்வுத் திட்டம் என சிறு கைத்தொழில் அமைச்சரும், ஈ.பி.டி.பி கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.தேசிய இன்பிரச்சினைக்கு தீர்வு காணும் மிகச் சிறந்த அரசியல் பொறிமுறைமையாக மாகாணசபை முறைமையை கருதுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாத அரசியலை நடாத்தியிருந்ததாகவும், அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு அபிவிருத்தித் திட்டங்கள் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை, தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாத கொள்கைகள் கோட்பாடுகளை பின்பற்றியே மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தோல்வி குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் விரைவில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான சுதந்திரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிழையாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சிங்கள அரசியல் கட்சிக்கு எதிராக தமிழ் அரசியல் கட்சி அடைந்த வெற்றியாக தேர்தல் வெற்றி சித்தரிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈ.பி.டி.பி. இராணுவத்திற்கு ஆதரவாக செயற்பட்டது எனவும், இதனை பகிரங்கமாக ஒப்புக் கொள்வதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply