பாக்தாத்தில் அடுத்தடுத்து கார் குண்டு தாக்குதல் : 49 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த கார் குண்டு வெடிப்புகளில் சிக்கி 49 பேர் பரிதாபமாக பலியாகினர். பாக்தாத் நகரில் மட்டும 8 இடங்களில் கார் குண்டுகள் வெடித்தன. இதில் 36 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.கராடா, சட்ரியா, சுலைமானியா, அதமியா உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் மேலும் 13 பேர் பலியாகினர். படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply