சிரியாவின் புரட்சிக்குழுக்கள் இணைந்து புதிய இஸ்லாமிய முன்னணியை அமைக்கின்றது
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியை முறியடிக்க கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக புரட்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். அரசாங்கப் படைகள் தற்போது போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.சென்ற மாதம் தலைநகர் டமாஸ்கசைச் சுற்றியுள்ள பல நகரங்களையும், சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவையும் அரசு ஆதரவு போராளிகளுடன் கூடிய ராணுவத்தினர் மீட்டுள்ளனர். லெபனானைச் சேர்ந்த ஷியா இஸ்லாமியர்களான ஹெஸ்பொல்லா இயக்கத்தினரும், ஈரானின் புரட்சி பாதுகாப்பு இயக்கமும் சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாதிற்குத் துணை புரிந்து வருகின்றன.
ஆயிரக்கணக்கான அகதிகள் பதுங்கியுள்ள குவாலமோன் மலைப்பகுதிகளிலும் தாக்குதல் நடவடிக்கை தொடங்கியுள்ளதால் இவர்கள் லெபனான் நாட்டிற்கு வெளியேற வேண்டிய அவசியமும் நேர்ந்துள்ளது. இந்த நிலையில், அதிபர் ஆசாத்தின் ஆட்சியை எதிர்த்துப் போராடும் புரட்சியாளர்கள் குழுவினர் ஒருங்கிணைந்து புதிய இஸ்லாமிய முன்னணி ஒன்றை அமைப்பதாக அறிவித்துள்ளனர்.
அஹ்ரார்-அல்-ஷம், ஜெய்ஷ்-அல்-அஸ்லாம், சக்கர்-அல்-ஷம், லிவா-அல்-தவ்ஹித், லிவா-அல்-ஹக், அன்சர்-அல்-ஷம் மற்றும் குர்திஷ் இஸ்லாமிய முன்னணி ஆகிய இயக்கங்கள் படிப்படியாக இணைவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய இஸ்லாமிய முன்னணி ஒரு சுதந்திரமான அரசியல்,ராணுவ மற்றும் சமூக உருவாக்கமாகச் செயல்பட்டு அதிபர் ஆசாத்தைப் பதவியிலிருந்து இறக்கி சிரியாவில் ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply