செல்வம் அடைக்கலநாதனின் பொய்க் காரணங்கள் அம்பலம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக் கட்சி களில் ஒன்றான ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பொது மக்களுக்கு வழங்கி வரும் வாக் குறுதிகள் அவரால் கடைப்பிடிக்கப்படு கின்றனவா என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் பாராளுமன்றில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு வருடத்திற்குள் நிரந்தர தீர்வு காணப்படாவிட்டால் தான் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார்.இந் நிலையில் ஒரு வருட காலக்கெடுவானது முடிவடைந்த நிலையிலும் அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்க் கூட்டமைப்பினால் தீர்வுத்திட்டத்தைக் காண முடியவில்லை. இதனடிப்படையில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி உண்ணாவிரதம் இருந்தே ஆக வேண்டும். ஆனால் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தாமல் விடுவதற்காக பல்வேறு பொய்க் காரணங்களை முன்வைக்கும் முயற்சிகளில் செல்வம் அடைக்கலநாதன் ஈடுபடுவதாக அறிய முடிகிறது. அவர் தான் விட்ட சவாலை மறந்தாலும் மக்கள் அதனை மறந்துவிடவில்லை. அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலமாக இனப்பிரச் சினைக்குத் தீர்வு காணப் பல சந்தர்ப்பங்களில் தமிழ்க் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவற்றைத் தட்டிக்கழித்து வருகிறது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply