பொது நலவாய மாநாட்டுக்கு செலவிடப்பட்ட தொகையை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்
பொது நலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்பதை அரசாங்கம் மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவக் குழுத் தலைவர் கருஜயசூரிய எம்.பி. விடுத்துள்ள அறிக்கையொன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,அந்த மாநாட்டுக்கு மக்களின் வரிப்பணம் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளதென்பது மக்களுக்குத் தெரியாது. மாநாட்டுக்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டதென்பது இதுவரை அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை. எவ்வித பகிரங்கத் தனமையுடன் செலவிடப்படவில்லை என்றும் முறையாக கேள்விப் பத்திரம் கோரி மாநாட்டுக்கான வேலைகள் ஒப்படைக்கப்பட்டனவா? இவர்கள் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார்கள் என்பதை அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும்.
பொதுநலவாய கொள்கைகளை மதிப்பதாகக் கூறும் இலங்கை தனது சகல செயற்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையைப் பேண வேண்டும்.
ராஜபக்ஷ அரசையும் ராஜபக்ஷ குடும்பத்தையும் காட்சிப்படுத்தும் நிகழ்வாகவே இந்த மாநாடு நடந்து முடிந்திருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ பொதுநலவாய நாடுகள் அமைப்புக்கு தலைமைப் பதவியை ஏற்றிருப்பது அவரை மேலும் ஒரு படி ஏகாதிபத்தியவாதியாக மாற்றியிருக்கிறது. இதனால் அரசுக்கு எதிரான கொள்கையுடையவர்கள் மேலும் துன்புறுத்தல்களுக்குள்ளாகலாம்.
இந்த மாநாட்டில் 23 நாடுகளின் அரச தலைவர்களே கலந்து கொண்டனர். இது கடந்த பொது நலவாய மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்களின் எண்ணிக்கையை விட மிகக் குறைந்ததாகும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply