அமெரிக்க தாக்குதலுக்கு எதிர்ப்பு பாகிஸ்தானில், இம்ரான்கான் கட்சியினர் மறியல் போராட்டம்

பாகிஸ்தானில் வட மேற்கில் உள்ள கைபர்– பக்துன் கவா மாகாணத்தின் மலைப் பகுதிகளில் தீவிரவாதிகள் முகாம் அமைத்து பதுங்கியுள்ளனர். அவர்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் அமெரிக்க உளவுத்துறை ஏவுகணை வீசி அழித்து வருகிறது.அதில் தீவிரவாதிகளுடன் பொதுமக்களும் பெருமளவில் உயிரிழக்கின்றனர். எனவே, அப்பகுதியில் அமெரிக்கா தாக்குதலை நிறுத்த வேண்டும் என இம்ரான்கானின் தெக்ரிக்– இ–இன்சாப் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். அதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை.

தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கைபர் பக்துன் கவா பகுதியில் சமீபத்தில் நடத்திய ஏவுகணை தாக்குதலில் மலைவாழ் மக்கள் 5 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் 3 பேரும் கொல்லப்பட்டனர்.

அதை தொடர்ந்து, அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தெக்ரிக்–இ– இன்சாப் கட்சியினர் நேற்று பெஷாவர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

பெஷாவரில் தனது கட்சி தொண்டர்கள் மத்தியில் இம்ரான்கான் பேசினார். அப்போது ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தும் ஏவுகணை தாக்குதலை அமெரிக்க தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோ படையினருக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்லும் அதன் வாகனங்களை மறிபோம் என்றார்.

அதை தொடர்ந்து ஆவேசம் அடைந்த கட்சி தொண்டர்கள் ஆயிரக் கணக்கானவர்கள் பெஷாவர் வழியாக ஆப்கானிஸ்தான் செல்லும் ‘நேட்டோ’ வாகனங்களை தடுத்து மறித்தனர். ரோடுகளில் அமர்ந்து மறியல் செய்தனர்.

அதே போன்று கைபர் பக்துன் கவா மாகாணம் வழியாக ஆப்கானிஸ்தான் செல்லும் சாலைகளில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் இம்ரான்கான் கட்சியுடன் அதன் கூட்டணி கட்சிகளும் கலந்து கொண்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்க தேசிய கொடியை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply