சீனாவின் விமானப் பாதுகாப்பு மண்டலம் ஜப்பானுக்கு பாதகமாக முடியும் : அமெரிக்கா
ஜப்பானின் பராமரிப்பின் கீழ்வரும் இரண்டு தீவுகள் உள்ளடக்கிய விமானப் பாதுகாப்பு வான்மண்டலம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக சீனா நேற்று முன்தினம் அறிவித்தது. கிழக்கு சீனக்கடலில் சீனா குறிப்பிடும் பகுதியில் பறந்து செல்லும் பிற விமானங்கள் சீனாவின் அனுமதி பெறவேண்டும் என்றும், இந்தப் பகுதிக்காக ரோந்து விமானங்கள் நியமிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்தது. சீனாவின் இந்த செயலை ஜப்பான் மிகவும் ஆபத்தானது என்று அறிவித்துள்ளது.ஏற்கனவே இரு நாடுகளுக்குமிடையே தீவுகள் உரிமைப் பிரச்சினை, கடற்பரப்பு ஆளுமை எல்லை போன்றவை பிரச்சினைக்குரியவையாக இருக்கும்போது சீனாவின் இந்த நடவடிக்கை ஜப்பானின் கோபத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. இதுகுறித்து தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ள அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி சீனாவின் இந்த ஒருதலைப்பட்சமான முடிவு இந்தப் பகுதியில் அழுத்தங்களை அதிகரித்து ஜப்பானுக்கு பாதகமாக முடியும் என்றார்.
அதனால் அமெரிக்கா தங்களின் நட்பு நாடான ஜப்பானைப் பாதுகாக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். சீனாவிடம் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாத அல்லது சீனாவின் உத்தரவுகளை ஏற்காத பிற நாட்டு விமானங்கள் மீது சீனா நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் ஞாயிறன்று ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கேட்டுக்கொண்டார்.
இங்கிலாது நாட்டின் பாதுகாப்புச் செயலரான சக் ஹெகலும் இந்த நடவடிக்கையைத் தவிர்க்குமாறு சீன அரசை வலியுறுத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply