பாகிஸ்தான் சிறையில் படுகொலை செய்யப்பட்ட சரப்ஜித் சிங்கின் உடைமைகள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் 1991ம் ஆண்டு மரண தண்டனை பெற்ற இந்தியரான சரப்ஜித்சிங், கோட் லக்பாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் சக கைதிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சரப்ஜித் சிங்,சில நாட்கள் வரை நினைவு திரும்பாமல் கோமா நிலையில் கிடந்தார்.சிகிச்சை பலனின்றி கடந்த மே மாதம் 2ம் தேதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட்டு சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.பாகிஸ்தான் சிறை அதிகாரிகளிடம் உள்ள சரப்ஜித் சிங்கின் துணிகள் மற்றும் அவர் பயன்படுத்திய உடைமைகள் ஆகியவற்றை தங்களுக்கு பெற்றுத்தர வேண்டும் என சர்ப்ஜித் சிங்கின் சகோதரி மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டேவிடம் முறையீடு செய்திருந்தார்.
இதனையடுத்து இந்திய அரசு மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித்சிங் பயன்படுத்திய குரான், 5 ஜதை உடைகள்,3 புனித நூல்கள்,ஒரு படுக்கை விரிப்பு,ஒரு போர்வை,காலணிகள் உள்பட 36 வகை பொருட்கள் இன்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவை சரப்ஜித்தின் குடும்பத்தாருக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என இந்திய தூதரக அதிகாரி ஒருவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply