சிரியா விவகாரம் ஜனவரி 22-ம் தேதி ஜெனிவாவில் அமைதி பேச்சுவார்த்தை
சிரியாவில் கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியை வீழ்த்த போராளிகள் முயன்று வருகின்றனர். இதனால் ஏராளமானோர் பலியானதுடன் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். தொடரும் உயிர்ப்பலியை நிறுத்தவும் அங்கு நடைபெறும் போர் முடிவுக்குவந்து மீண்டும் அமைதி நிலவவும் உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதன் முதல்கட்டமாக தங்கள் வசம் இருந்த ரசாயன ஆயுதங்களை அழிக்க சிரியா ஒப்புக்கொண்டு அந்தப்பணி நடைபெற்று வருகின்றது.உலக நாடுகளின் ஆதரவுடன் கடந்த மே மாதம் முதல் சிரியாவின் அமைதிக்காக முயற்சி செய்துவரும் அந்நாட்டின் மத்தியஸ்தரான லக்டர் பிரஹிமி, டிசம்பர் மத்திக்குள் இந்த அமைதி ஒப்பந்தம் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகின்றார். கடந்த ஜூன் மாதம் முடிவு செய்ததுபோல் சிரியாவில் போர் புரிந்துவரும் அனைத்துத் தரப்பினரையும், ராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் உட்பட முழு நிர்வாக அதிகாரங்களை ஏற்று இடைக்கால அரசு அமைக்க இந்த ஒப்பந்தம் அழைக்கின்றது. இதற்கு முன்னோடியாக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் அதிகாரிகளை அவர் ஜெனிவாவில் சந்தித்துப் பேசியுள்ளார்.
வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் மற்றும் அவரது ஆட்சியைக் கவிழ்க்க முயலும் புரட்சியாளர் குழுவினருடன் ஜெனிவாவில் நேருக்கு நேரான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ஐ.நா. இன்று அறிவித்துள்ளது.
நம்பிக்கையுடன் அங்கு செல்வோம் என்று ஐ.நாவின் பொதுச் செயலரான பான் கி மூன் தெரிவித்துள்ளார். சிரியாவின் நட்பு நாடான ஈரான் உட்பட எந்த நாடுகள் இந்த நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்பது இன்னும் சரிவரத் தெரியாத நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply