பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு இனங்களுக்கு இடையில் நிலையான ஒத்துழைப்பு அவசியம்

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு இனங்களுக்கு இடையில் நிலையான ஒத்துழைப்பு அவசியம் என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அது நியமமான தொடர்பாடல்களுடனான ஒத்துழைப்பாக அமைய வேண்டும்.எனினும், சிலநாடுகள் இந்த விடயத்தில் தெரிவுகளை மேற்கொள்வதாக காலி கடல் பாதுகாப்பு கலந்துரையாடலில் உரையாற்றி போது அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச ரீதியான சவால்களின் போது நாடுகள் தமக்கிடையில் இதயபூர்வமாக ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒத்துழைப்பு உயர் மட்டத்திலிருந்து நிலை பெற வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான உலக சவால் பற்றி பேசும் சில நாடுகள் அதன்போது, தெரிவுகளை மேற்கொள்கின்றன. குறிப்பாக இலங்கைக்கு மேற்கத்தைய நாடுகளிடம் இருந்து பாரிய அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply