இந்திய ‘நர்ஸ்’களுக்கு பயிற்சி அளித்து ஜெர்மனிக்கு அழைத்து செல்ல புதிய ஏற்பாடு
ஜெர்மனி நாட்டில் முதியோர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. அதற்கேற்ப முதியோர் மருத்துவ சிறப்பு பிரிவுகளில் ஆள்பற்றாக்குறையும் பெருகியபடி உள்ளது.குறிப்பாக, நர்ஸ் எனப்படும் செவிலியர் பணியிடங்களை நிரப்ப சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த பெண்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, பின்னர் ஜெர்மனிக்கு அழைத்து வந்து பணியாணை வழங்கப்படுகிறது.இதே முறையை பின்பற்றி இந்தியாவில் உள்ள நர்ஸ்களையும் ஜெர்மனிக்கு அழைத்து சென்று பணி வழங்க அந்நாட்டின் சுகாதார துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 30 நர்சுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். ஜெர்மனிக்கு சென்ற பின்னர் அவர்களுக்கு பணி அனுமதியுடன் குடியிருக்கும் அனுமதியும் வழங்கப்படும்.
அந்நாட்டின் விதிமுறைகளின் படி, நர்ஸ்களுக்கு நியாயமான சம்பளமும் கிடைக்கும். காலப்போக்கில் அவர்கள் ஜெர்மனியின் குடிமக்கள் ஆகவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply