மங்கள்யான் செவ்வாயை நோக்கிய பயணத்தை தொடங்கியது
செவ்வாய்க் கிரகத்தை ஆராய இந்தியா அனுப்பிய விண்கலன், மங்கள்யான், பூமியின் நீள் சுற்றுவட்டப்பாதையை விட்டு வெளியேறி, செவ்வாய்க்கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியிருக்கிறது.இன்று ஞாயிறு, அதிகாலை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள், மங்கள்யான் , பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து விலகத் தேவையான , நீள் வேகத்தைத் தரும் வண்ணம், மங்கள்யானின் பிரதான எஞ்சினை இயக்கினர்.சுமார் 20 நிமிடங்கள் இந்த எஞ்சினை அவர்கள் இயக்கி, மங்கள்யானின் வேகத்தை அதிகரித்து, அதனை புவிவட்டப் பாதையிலிருந்து விடுவித்து, செவ்வாய்க்கிரகத்துக்கான பாதைக்குள் செலுத்தினர்.
செவ்வாய்க்கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைய இதற்கு சுமார் 300 நாட்கள் பிடிக்கும்.
நவம்பர் 5ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் , செவ்வாய்க்கிரகத்தில் மித்தேன் வாயு இருக்கிறதா என்பதை ஆராயும்.இந்த முயற்சிக்கு இந்தியாவுக்கு சுமார் 450 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது.
விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்தியா சீனா ஆகிய இரு ஆசிய நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் சீனா செவ்வாய்க்கிரகத்தை ஆராய அனுப்பிய விண்கலன் பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வெளியேறுகையில் , விண்வெளியில் எரிந்துவிட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply