கடத்தப்பட்ட கதிரியக்கப் பொருளடங்கிய வாகனம் மீட்பு

மெக்சிகோ சிட்டியில் செவ்வாய்க்கிழமையன்று கதிரியக்க பொருட்களைக் கொண்டு சென்று, கடத்தப்பட்ட ட்ரக் வண்டியைக் கைப்பற்றியுள்ளதாக மெக்சிகோ அதிகாரிகள் கூறுகின்றனர். கோபால்ட்-60 எனப்படும் அந்த கதிரியக்க பொருள் அதன் பாதுகப்பு கொள்கலனிலிருந்து வெளியே எடுக்கப்பட்டிருந்தது, ஆனால் அது அருகிலேயே இருந்தது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.அதைத் திருடியவர்கள், உயிருக்கு ஆபத்தான அளவிலான கதிரியக்கத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும், ஆனால் சுற்றுப்புறப் பகுதியில் இருக்கும் மக்களின் உடல் நலத்திற்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் கதிரியக்க சிகிச்சை இயந்திரம் ஒன்றை, வடக்கு நகரமான திஜுவானா என்ற ஊரின் மருத்துவமனையில் இருந்து, இந்த வாகனம் கொண்டு சென்றுகொண்டிருந்தது.

ஒரு பெட்ரோல் நிலயத்தில் தன்னை தாக்கி அந்த வாகனத்தை இரண்டு நபர்கள் எடுத்துச் சென்றதாக அதன் ஓட்டுனர் தெரிவித்துள்ளார். திருடியவர்களுக்கு அந்த வாகனத்தின் உள்ளே என்ன பொருட்கள் உள்ளதென்று தெரிந்திருக்காது என்றும் அந்த ஓட்டுனர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply