காஷ்மீர் பிரச்னையால் நான்காவது போர் ஏற்படலாம்: பாகிஸ்தான் : பிரதமர் நவாஸ் ஷெரீப்
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பிரச்னையால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே, எந்த நேரத்தில் வேண்டுமானாலும், போர் நடக்க வாய்ப்புள்ளது’ என, பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளதாக, பாகிஸ்தானிலிருந்து வெளியாகும், “டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள, ஆசாத் காஷ்மீர் சட்டசபையின், பட்ஜெட் கூட்டத்தில், நவாஸ் ஷெரீப் பேசியதாக, அப்பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: மக்களின் உணர்வுகளை மதித்து, காஷ்மீர் விஷயத்தில் தீர்வு காணப்பட வேண்டும். காஷ்மீர் விவகாரத்தால், இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே, எந்த நேரத்தில் வேண்டுமானாலும், நான்காவது முறையாக போர் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த விஷயத்தில் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்.இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர், சுதந்திரம் அடைய வேண்டும் என்பது தான் எனது கனவாக உள்ளது. என் வாழ்நாளுக்குள், இந்த நிகழ்வைக் காண விரும்புகிறேன்.இந்தியாவால் தான், இந்த பகுதியில் ஆயுதப் போட்டி நிலவுகிறது. வாய்ப்பு கிடைத்தால், ஆயுதங்களுக்கு செலவிடும் தொகையை, வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு பயன்படுத்துவோம். கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில், தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது. இவ்வாறு நவாஸ் ஷெரீப் பேசியதாக, செய்தி வெளியாகி உள்ளது.”காஷ்மீர் விவகாரத்தால், போர் ஏற்படும் சூழல் உள்ளதாக, நவாஸ் ஷெரீப் கூறவில்லை; தவறான கருத்தை, “டான்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது’ என, பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவை வெல்ல முடியாது:
ஷெரீப்பின் இந்த பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், டில்லியில் நேற்று, பிரதமர் மன்மோகன் சிங் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “”என் வாழ்நாளில், பாகிஸ்தான் இந்தியாவுடன் போரிட்டால், வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை,” என்றார்.பிரதமர், மன்மோகன் சிங் பேட்டி வெளியானதும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பாக்., பிரதமர், நவாஸ் ஷெரீப் பேசியதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை’ என, அவசர அவசரமாக, மறுப்பு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply