யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் முயற்சியில் தி.மு.க

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் முயற்சியில் திமுக இலங்கை யுத்தக் குற்ச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் முயற்சியில் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகக் கட்சி இறங்கியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்ட யுத்தத்தின் போது யுத்த குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.193ம் சட்டத்தின் அடிப்படையில் பாராளுமன்றில் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த கருணாநிதி முயற்சி எடுத்து வருகின்றார். இந்திய பாராளுமன்றில் விவாதம் நடாத்துவதற்கு அனுமதியளிக்குமாறு கருணாநிதி கோரியுள்ளார். மனித உரிமை மீறல்கள் மற்றும்; யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த அனுமதியளிக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ரீ.கே. பாலு, இந்தக் கோரிக்கை தொடர்பில் சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமானதும், வெளிப்படையானதுமான சுயாதீன விசாரணகைள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என இந்திய பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகம் கோரியுள்ளது. இலங்கை விவாகரம் தொடர்பில் இ;ந்திய பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரையில் ஓயப் போவதில்லை என பாலு தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply