ஜெர்மனியில், முதன் முறையாக, பாதுகாப்புத்துறைக்கு பெண் அமைச்சர்

ஜெர்மனியில், முதன் முறையாக, பாதுகாப்புத்துறைக்கு பெண் அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெர்மனியில், சில மாதங்களுக்கு முன் நடந்த தேர்தலில், மூன்றாவது முறையாக, ஏஞ்சலா மெர்க்கெல், பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.இவரது அமைச்சரவையில், ஏழு குழந்தைகளுக்குத் தாயான, உர்சுலா டேர் லேயன், 55, பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆணாதிக்கம் நிறைந்த அந்நாட்டு அரசு மற்றும் ராணுவத் துறையில், லேயன், நியமிக்கப்பட்டதற்கு, ராணுவ தரப்பில் எத்தகைய வரவேற்பு இருக்கும் என்பது இனிமேல்தான் தெரிய வரும். பிரதமர் மெர்க்கெலின், அரசியல் வாரிசாக, லேயன் கருதப்படுகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply