வரவு செலவுத்திட்டம்; 3வது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6.00 மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை 9.30 மணிக்குக் கூடவு ள்ளது.இறுதி நாளான இன்று வரவு செலவுத் திட்டத்தில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சுக்கான குழு நிலை விவாதம் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
2014ம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் கடந்த மாதம் 21ம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மொத்தம் 21 நாட்கள் விவாதம் நடத்தப்பமட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply