அரசாங்கம் இரகசிய உளவுப் பிரிவினைப் பயன்படுத்தி தகவல்களைத் திரட்டுகின்றது : சஜித்

அரசாங்கம் இரகசிய உளவுப் பிரிவினைப் பயன்படுத்தி தகவல்களை திரட்டுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். லுனுகம்வெஹர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இந்த அரசாங்கம் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கின்றது எனவும், இரகசியப் புலனாய்வுப் பிரிவை உருவாக்கி தகவல்களை திரட்டிக் கொள்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாகவே அரசாங்கத்திற்கு எல்லாம் தெரிகின்றது என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையாளருக்கு முன்னதாக அமைச்சர்களுக்கு தேர்தல் நடைபெறப் போகும் தினம் பற்றி தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் மக்களின் பணத்தை கொள்ளையிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

போலி நிதி நிறுவனங்களை அரசாங்கம் நடாத்தி வருவதாக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்கு தெரியாதது என்னவென்றால் நாட்டில் சக்வித்தி ரணசிங்க போன்ற பல்வேறு மோசடிகாரர்கள் இருக்கின்றார்கள் என்பது மட்டுமே என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply