இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் மீண்டும் தீர்மானம்: அமெரிக்கா கொண்டு வருகிறது
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. அதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை ராணுவம் போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாகவும், அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து அமெரிக்கா ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக 2 தடவை தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.இந்த நிலையில், அமெரிக்கா 3–வது தடவையாக இலங்கைக்கு எதிராக மீண்டும் தீர்மானம் கொண்டு வருகிறது. தற்போது இந்த தீர்மானத்தை இங்கிலாந்துடன் கூட்டாக இணைந்து அமெரிக்கா தயாரித்துள்ளது.
ஜெனீவாவில் வருகிற மார்ச் 26–ந்தேதி ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டம் நடக்கிறது. அப்போது இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமீபத்தில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு போர்க் குற்றம் குறித்து நேரில் விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில் 10 ஆயிரம் சொற்களை கொண்ட அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளார்.
அந்த அறிக்கையும் வருகிற மார்ச் 26–ந்தேதி மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த அறிக்கையின் பின்னர் அமெரிக்காவின் தீர்மானம் சமர்ப்பிக்கப்படுகிறது.
இதற்கிடையே போர்க் குற்றம் தொடர்பாக தன்னிச்சையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப் போவதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தாமே முன் வந்து போர்க்குற்ற விசாரணையை இலங்கை தொடங்கினால் அதற்கு ஆதரவளிக்க தயார் என்றும் அறிவித்துள்ளது. இந்த தகவலை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வெளியுறவு துறை மந்திரி ஹிகோஸ்வர் தெரிவித்தார்.
சர்வதேச நாடுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்த விசாரணைகள் அமைய வேண்டும். வெறுமனே திருப்திபடுத்தும் வகையில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுமானால் அதை இங்கிலாந்து ஏற்றுக் கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply