பயங்கரவாதத்தினை தோற்கடிக்க ஆசிய நாடுகள் ஒன்றுபட வேண்டும்

சர்வதேச பயங்கரவாதத்தினை தோற்கடிப்பதற்காக ஆசிய பிராந்திய நாடுகள் ஒற்றுமை யாகச் செயற்படல் வேண்டும் என பிரதம அமைச்சர் தி. மு. ஜயரத்ன கூறினார். பயங்கரவாதத்தினால் ஒரு நாட்டுக்கு அழுத்தம் ஏற் படும்போது அது அந்த நாட்டை மட்டுமன்றி பிராந்தியத் திற்கே பாதிப்பினை ஏற்படுத் துவதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் க்வாசிம் குரைஸி நேற்று முன்தினம் (06) ஆம் திகதி பிற்பகல் பிரதம அமைச்சர் அலுவலகத்தில் பிரதம அமைச்சரைச் சந்தித்த போதே பிரதமர் இந்தக் கருத் தைத் தெரிவித்தார்.

பயங்கரவாதம் காரணமாக பாதிப்புக்குட்பட்ட பல நாடுகளை சுட்டிக்காட்ட முடியுமெனவும் பயங்கரவாதத்தின் காரணமாக நாடுகள் எவ்வித அடிப்படைக் காரணங்களுமின்றி எதிரிகளாக மாறுவதாகவும் யுத்தம் காரணமாக ரஷ்யா பல துண்டுகளாக பிரிந்துவிட்டதாகவும் வெகுவிரைவில் ஆசியாவிலும் பயங்கரவாதம் காரணமாக நாடுகள் பிளவுபடுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

30 வருடங்களாக பயங்கரவாத யுத்தத்தினால் பாதிப்புக்குட்பட்டிருந்த இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப் பட்டாலும் பல மேற்கத்திய நாடுகள் இலங்கையின் இறைமை மீது அழுத்தம் செலுத்துவதாகவும் கூறினார். அதனால் அந்த நாடுகளுக்கு இடமளிக்காத வகையில் பிராந்திய நாடுகள் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் சர்வதேச அழுத்தத்தை முறியடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இலங்கை – பாகிஸ்தான் நாடுகளுக் கிடையே நிலவும் முதலீடு, சுற்றுலாத் துறை போன்ற துறைகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கு உத்தேசிப்பதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் க்வாசீம் குரைஸி அவர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் பணி புரிவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சி தரும் விடயமெனவும், இலங்கை – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இரு தரப்பு தொடர்புகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கு தாம் உச்ச அளவில் தமது பங்களிப்பினை வழங்குவதாகவும், பயங்கரவாதத்தினால் பாகிஸ்தான் நிதமும் பாதிப்புக்குட்படு வதாகவும், பயங்கரவாதத்தினை பூண்டோடு ஒழிக்கும் விடயத்திற்கு பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்குமெனவும் கூறினார். பிரதம அமைச்சரின் செயலாளர் எஸ். அமரசேக்கர இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் க்வாசீம் குரைஸி அவர்கள் பிரதம அமைச்சர் கலாநிதி தி. மு. ஜயரத்னவுடன் கலந்துரையாடுவதனை புகைப்படத்தில் காணலாம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply