முதல் பெண்மணியின் மகளிர் தின வாழ்த்து
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உலகெங்கிலுமுள்ள எல்லா பெண்களினதும் சுதந்திரம் மற்றும் சமாதானத்திற்காக இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். பல சமூகங்களில் இலங்கைப் பெண்கள் பல்வேறு பெறுமதிவாய்ந்த முன்னு தாரணங்களாகத் திகழ்கின்றனர். மிகப்பெரும் வரலாற்று மற்றும் கலாசார முதுசங்கள், ஒழுக்க மற்றும் கல்வி ரீதியாக வளம்பெற்ற இலங்கைப் பெண்கள் அவர்களது பண்பாட்டுப் பலத்தினூடாக உலகெங் கிலுமுள்ள பெண் கள் மத்தியில் ஒரு தனி இடத்தை வகிக்கின்றனர். இத்தனிச்சிறப்பிடம் காலமாற்றத்தில் தொடர்ந்தும் மேம்பட வேண்டும்.
முரண்பாடுகள் மற்றும் யுத்தங்களின் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று தசாப்தகாலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளையும் ஆட்கொண்டிருந்த மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பை தோற்கடிப்பதில் எமது நாடு வெற்றியடைந்துள்ளது என்றவகையில் இலங்கையிலுள்ள பெண்கள் இன்று மிகப்பெரும் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.
வறுமை ஒழிப்பு, நாட்டின் சகல பகுதிகளுக்குமான மின்சார விநியோகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பரவலின் விளைவாகக் கிடைக்கப்பெற்றிருக்கும் புதிய கருவிகள் உபகரணங்கள் என்பவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் பயன்களை இலங்கைப் பெண்கள் தற்போது அனுபவித்து வருகின்றனர். அரச மற்றும் தனியார் துறையின் வாயில்கள் பெண்களுக்கும் விரிவாகத் திறக்கப் பட்டுள்ளன. உயர் கல்விக்காகச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை முன்னெப் போதுமில்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இலங்கைப் பெண்களின் பலமான கட்டுப்பாட்டு உணர்வு, நன்னடத்தை, அமைதியான வாழ்க்கைமுறை என்பன இலங்கையில் அமைதி மற்றும் ஐக்கியத்திற்கான ஒரு சிறந்த அடித்தளத்தை இட்டுள்ளது. தமது பிள்ளைகளின் கல்வியின் மீதான இலங்கைத் தாய்மாரின் அர்ப்பணமிக்க கவனம் நாட்டின் வளமான மனித வள வங்கிக்கான ஒரு உறுதியான காரணியாகும். இலங்கைக் குடும்பத்தின் பலம் தாய்மையின் உறுதியான அடித்தளத்தில் எழுப்பப்பட்டதாகும். குடும்ப அலகின் வியத்தகு பலம் எமது பெண்களின் அர்ப்பணத்தையே வெளிப்படுத்தி நிற்கின்றது.
சமூக முன்னேற்றத்திற்கான தமது அர்ப்பணத்தில் இலங்கைப் பெண்கள் உலகெங்கிலும் தொடர்ந்து பிரகாசிக்கவும் ஏனையவர்களுக்கு மும்மாதிரியாய் இருக்கவும் எனது வாழ்த்துக்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply