கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் மாயம்: 239 பேரின் நிலை குறித்து அச்சம்
மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து 239 பேருடன் பீஜிங் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் இன்று சனிக்கிழமை காலை மாயமாகியுள்ளதாக மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எம்.எச்.370 என்ற விமானம் அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 2.40 மணியளவில் மலேசியாவிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. பீஜிங் விமான நிலையத்தில் காலை 6.30 மணிக்கு தரையிறக்கப்பட வேண்டிய விமானம் இதுவரை அங்கு வருகை தரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இரு நாடுகளிலும் பதற்றம் நிலவுகிறது. வான்பரப்பில் மாயமாகியுள்ள விமானத்தை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை பயணிகளின் உறவினர்கள் பீஜிங் விமான நிலையத்துக்கு படையெடுத்துள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply