பள்ளி ஆய்வகத்தில் அணு உற்பத்தியை உருவாக்கி 13 வயது சிறுவன் சாதனை

வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள லன்கஷைர் பகுதியில் வசிக்கும் 13 வயது மாணவன் தனது பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் அணு உலையை ஏற்படுத்தி, அதில் வெற்றிகரமாக அணு சேர்க்கையின் மூலம் உற்பத்தியையும் உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளான். ஜேமி எட்வர்ட்ஸ் என்ற அந்த சிறுவன், தனது கைச் செலவுக்கு பெற்றோர் தரும் பணத்தையும், கிருஸ்துமஸ் பண்டிகையின் போது அன்பளிப்பாக கிடைத்த பணத்தையும் சேமித்து வைத்து சிறிய அணு உலையை ஏற்படுத்தும் பணியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து முழுமூச்சாக ஈடுபட்டு வந்தான்.

சுமார் 6 மாத விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் பலனாக கடந்த வியாழக்கிழமை தனது பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் 2 ஹைட்ரஜன் அணுக்களை இணைத்து வெற்றிகரமாக ஹீலியம் எனப்படும் அணுசக்தியை உற்பத்தி செய்து புதிய சாதனையை ஜேமி எட்வர்ட்ஸ் ஏற்படுத்தியுள்ளான்.

இந்த எண்ணம் தோன்றியது எப்படி? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்காவின் நிவேடா பகுதியை சேர்ந்த 14 வயது மாணவனான டெய்லர் வில்சன் இதே போன்று ஆய்வு கூடத்தில் அணு உற்பத்தி செய்து சாதனை படைத்ததாக அறிந்தேன்.

இதன் மூலம் குறைந்த வயதில் அணு உற்பத்தி செய்து சாதனை படைத்த உலகின் முதல் மாணவன் என்ற பெருமைக்குரியவனாக அந்த மாணவன் விளங்கியதை தெரிந்து கொண்டேன். நாமும் முயன்று தான் பார்ப்போமே… என்ற தன்னம்பிக்கையில் எனது திட்டத்தை செயல்படுத்த தொடங்கினேன்.

எனது சக மாணவர்களில் சிலர் என்னை பைத்தியக்காரன் என்று எண்ணியிருக்கக் கூடும். எனது உலையில் இரண்டு அணுக்கள் ஒன்றிணைந்து புதிய ஆற்றல் உருவான போது என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை என்று கூறினான்.

இதன் மூலம் குறைந்த வயதில் அணு உற்பத்தி செய்து சாதனை படைத்த உலகின் முதல் மாணவன் என்ற பெருமை தற்போது ஜேமி எட்வர்ட்ஸ்-ஐ வந்து சேர்ந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply