இலங்கையில் தபால் மூல வாக்களிப்பு நேற்றுடன் பூர்த்தி

மேல் மற்றும் தென் மாகாண சபை களுக்கான தபால் மூல வாக்களிப்பு நேற்றைய தினமும் எவ்வித குளறு படிகளுமின்றி சுமுகமாக நடைபெற்றதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது. தபால் மூல வாக்களிப்பு நடைபெற்ற இரண்டாவது நாளான நேற்றும் தேர்தல் சட்ட விதிகளை மீறும் எவ்வித குற்றச்செயல்களும் இடம்பெற்றிரு க்கவில்லையென திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்றவர்களுள் அநேகமானோர் தமது வாக்குகளை நேற்றும் நேற்றுமுன்தினமும் வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள இரு மாகாண சபைத் தேர்தல்களையும் முன்னிட்டு பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள், படையினர், தேர்தல் கடமையில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக கடந்த 13, 14ஆம் திகதிகளில் நாடு முழுவதுமுள்ள தெரிவுசெய்யப்பட்ட அரசாங்க அலுவலகங்களில் தபால்மூல வாக்களிப்பு நடத்தப்பட்டது. மேற்படி இரண்டு தினங்களிலும் தபால் மூலம் வாக்களிக்க தவறியவர்களுக்காக தேர்தல்கள் திணைக்களம் விசேட ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது.

இம்முறை இரண்டு மாகாண சபைகளிலும் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 796 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தபால்மூல வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றதனை பெப்ரல் மற்றும் கபே அமைப்புகள் ஊர்ஜிதம் செய்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply