கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அடுத்த வாரம் உக்ரைன் பயணம்
உக்ரைனில் விக்டர் யனுகோவிச்சின் ஆட்சி முடிவுக்கு வந்து ரஷ்யாவின் தலையீடுகளின்கீழ் புதிய அரசாங்கம் அமைந்துள்ளது. இந்நாட்டின் இடைக்கால பிரதமராக ஆர்செனி யட்சென்யுக் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜி7 உறுப்பினர் நாடுகளில் ஒன்றான கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அடுத்த வாரம் உக்ரைன் சென்று புதிய பிரதமரை சந்திக்க இருக்கின்றார். இவர் கடைசியாக கடந்த 2010ஆம் ஆண்டில் அங்கு சென்றிருந்ததாக குறிப்பிடும் தகவல்கள் ஜி7 உறுப்பினர் தலைவர்களில் உக்ரைனுக்கு செல்லும் முதல் தலைவரும் இவராவார் என்று தெரிவிக்கின்றன.
வரும் 24, 25 தேதிகளில் நெதர்லாந்திற்கு செல்லும் ஹார்ப்பர் திஹேகில் நடைபெற உள்ள அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுகின்றார். அதற்கு முன்னால் 22 ஆம் தேதி அன்று உக்ரைனுக்கு சென்று புதிய பிரதமர் ஆர்செனியையும் அவர் சந்திக்க உள்ளார். தனது பயணம் குறித்த செய்தியை வெளியிடும்போது நட்பு நாடுகளுடன் இணைந்து தங்களது அரசும் உக்ரைனின் இறையாண்மையை ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார். உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைய விரும்பும் தனது முடிவை ஞாயிறன்று அவசரமாகக் கூட்டப்பட்ட வாக்கெடுப்பில் கிரிமியா தெரிவித்துள்ளதை தொடர்ந்து இவரது விஜயம் நடைபெற உள்ளது.
எனினும், கிரிமியாவின் இந்த முடிவை தாங்கள் ஏற்கவில்லை என்று கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பைர்ட் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply