முஸ்லிம் காங்கிரஸூம், TNA யும் இணைந்து செயற்படும் காலம் தொலைவில் இல்லை : ஹக்கீம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படும் காலம் தொலைவில் இல்லை என நீதி அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சரியான காரியங்களை சரியான நேரத்தில் செய்ய வேண்டுமென மறைந்த கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அடிக்கடி சுட்டிக்காட்டுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.முஸ்லிம் காங்கிரஸிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இதுவே சிறந்த தருணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியிட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவின் முக்கிய அதிதிகளில் ஒருவராக வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என விக்னேஸ்வரனும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply