மனித உரிமை ஆர்வலர்களை அச்சுறுத்தும் இலங்கை : அமெரிக்கா

மனித உரிமை ஆர்வலர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசுக்கு அமெரிக்க கண்டம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பளார் ஜென் சகி, கூறியது: மனித உரிமை ஆர்வலர்கள் ருகி பெர்ணாண்டோ மற்றும் பிரவீன் மகேசன் ஆகியோர் மீதான இலங்கை அரசின் கைது நடவடிக்கை, மிகுந்த கவலையை அளிப்பதாக உள்ளது. தற்போது இருவரும் விடுவிக்கப்பட்டபோதிலும் அவர்களுக்கு பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து அச்சுறுத்த வாய்பிருக்கிறது . இதேபோன்று விசாரணை என்ற பெயரில் மேலும் சில மனித உரிமை அமைப்புகளை இலங்கை பாதுகாப்புப் படையினர் குறிவைத்திருப்பது பற்றி தகவல் வந்திருக்கிறது.

போரினால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக போராடும் சொந்த நாட்டு மக்களை துன்புறுத்துவது, இலங்கை ஜனநாயகத்தின் மீதான மதிப்பீட்டை குறைக்கவே உதவும். ஆகேவ இலங்கயில் பேச்சுரிமை, சுதந்திரமாக நடமாடும் உரிமை உள்ளிட்ட மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அந்நாட்டு அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார். மேலும் இலங்கையில் நடைபெறும் தொடர் மனித உரிமை மீறல் காரணமாகவே ஐ.நா மனித உரிமை அவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்திருப்பதாகவும்,, உலக நாடுகளின் ஆதரவுடன் அத்தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று உறுதி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply