சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகிறது
சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. இக்கூட்டம் அலரி மாளிகையில் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெறவுள்ளது. தென் மற்றும் மேல் மாகாண சபை தேர்தல் முடிவுற்ற நிலையில் முதலமைச்சர்கள் தெரிவு கூட்டத்தில் முக்கிய இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல் மாகாணசபையின் முதலமைச்சராக பிரசன்ன ரணதுங்கவும், தென் மாகாணசபையின் முதலமைச்சராக ஷான் விஜயலாலும் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு எடுக்கும் முடிவு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டு பின் செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply