வெளிநாடு செல்ல அனுமதி கோருகிறார் முஷாரஃப்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உடல் நலமின்றி இருக்கும் 95-வயதான தனது தாயாரைப் பார்ப்பதற்காக செல்வதற்கு தன்னை அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப், அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு வழிவகை செய்யும் விதமாக, முஷாரஃப் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி அவர் திங்கள்கிழமை விண்ணப்பித்திருப்பதாக, அவரது வழக்குரைஞர் நஸீம் தெரிவித்தார். இதை தெரிவிப்பதற்காக, இஸ்லாமாபாதில் திங்கள்கிழமை மாலை அவசரமாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

முஷாரஃப் மீது தேசத் துரோக வழக்கு நடைபெற்றுவரும் நிலையில், “முஷாரஃபின் கோரிக்கை எதையும் சிறப்பு நீதிமன்றம் நிராகரிக்கவில்லை. மாறாக, அவர் தமது கட்டுப்பாட்டில் இல்லை என்றே கூறியுள்ளது.

வெளிநாடுக்கு செல்ல முஷாரஃபுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க தனக்கு அதிகாரமில்லை என்றும் அதற்கான அதிகாரம் அரசுக்குத்தான் உள்ளது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது’ என்று நஸீம் கூறினார்.

கடந்த 2007-ம் ஆண்டில் அதிபராக இருந்தபோது, அவசரநிலையை பிரகடனம் செய்ததற்காகவும், நீதிபதிகள் கைது செய்யப்பட்டதற்காகவும் முஷாரஃப் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply