ஜெனிவா பிரேரணை அமுலாவது உறுதியாகும் : ரில்வின் சில்வா
ஜெனீவா பிரேரணையினை அரசாங்கம் நிராகரித்தாலும் பிரேரணை நிறைவேறப்போவது உறுதியே. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் மாற்று வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மேலும், மாகாண சபை தேர்தலில் வெற்றிகொள்ளவே அரசாங்கம் ஜெனீவா பிரேரணையில் தோற்றுள்ளது. தனது சுயநலத்திற்காக சர்வதேசத்திடம் இலங்கையை காட்டிக்கொடுத்து விட்டனர் எனவும் அவர் அரசாங்கத்தினை குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜெனீவா பிரேரணையினை நிராகரிக்கும் என்ற அரசாங்கத்தின் கருத்துத் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகளினால் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையினை அரசாங்கம் செயற்படுத்தியாக வேண்டும். அரசாங்கம் இப் பிரேரனையினை ஏற்காவிட்டாலும் இலங்கைக்கு எதிராக ஜெனீவா பிரேரணை நிறைவேறப்போவது உறுதியே. அரசாங்கம் மக்களை ஏமாற்றி தமது இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காக பொய்யாக கருத்துகளையும், வீண் சவால்களையும் விடுக்கின்றனர். பிரேரணையினை அரசாங்கம் எதிர்க்குமாயின் நாட்டிற்கு எதிராக வேறு விதத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும். அதற்கு அரசாங்கம் முகம் கொடுக்க முடியாது. குறிப்பாக பொருளாதாரத் தடைகள் இலங்கைக்கு எதிராக விதிக்கப்படுமாயின் நாட்டில் நிலைமையினை பெரிதும் பாதிக்கும். அதேபோல் ஜெனீவாவில் பிரேரனை கொண்டு வரப்பட்ட பின்னர் அதனை எதிர்ப்பதென்பதும் முட்டாள்த்தனமான விடயமே. சர்வதேச கூட்டங்களை எதிர்த்து அதற்கேற்ற பிரேரணையில் மாற்று வேலைத்திட்டங்களை கொண்டுவருவதென்பது சாத்தியமற்ற காரியமாகும்.
அதனை அரசாங்ம் ஒரு போதும் செய்ய முடியாது. மேலும், இன்று அரசாங்கம் எதிர்க்கருத்துகளை குறிப்பிட்டு வருவதும், வீர வசனங்கள் பேசுவதும் மக்களை ஏமாற்றுவதற்காகவே தவிர, வேறெந்த செயற்பாட்டிற்காகவுமில்லை. குறிப்பாக இம்முறை மாகாண சபை தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே அரசாங்கம் ஜெனீவா பிரேரனையினை தோற்றது. அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரனைக்கு எதிராக அந்த நாடுகள் செயற்பட்டது என்பது தெரிந்தும் நம்நிலை வகித்த நாடுகளை தம்பக்கம் ஈர்க்க அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஏனைய அமைப்புகள் பிரேரனையினை வெற்றிகொள்ள தொடர்ந்து முயற்சித்த நிலையில் அரசாங்கத்தினர் மக்களை தம்பக்கம் ஈர்த்து தேர்தலை வெற்றிகொள்வதற்காகவே ஈடுபட்டனர்.
ஜெனீவா பிரேரனை கொண்டு வரப்பட்ட காலத்தில் மின்சாரக்கதிரை கதைகளையும், நாட்டிற்கு பாதிப்பு என்றும் மக்களை ஏமாற்றிவிட்டு தற்போது மாற்று நடவடிக்கை தொடர்பில் பேசுகின்றனர். இலங்கையில் மூவின மக்களையும் ஒன்றிணைத்து ஜனநாயக ஆட்சியினை ஏற்படுத்தும் வழியினை அரசாங்கம் கையால வேண்டும். இனியும் நாட்டில் பிரிவினைவாதத்தையும், மதவாதங்களையும் தூண்டி மனித உரிமை மீறள்களை செய்யக்கூடாது. இம்முறை மகாண சபை தேர்தல் அரசாங்கத்திற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது. மக்கள் அரசாங்கத்தை நம்பவில்லை என்றும், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களிலும் திருப்தியில்லை என்பது இம்முறை தேர்தலில் வெளிபட்டுவிட்டது. இனியும் அரசாங்கத்தின் பொய்கள் பழிக்காது எனவும் அவர் தெரவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply