சிலியின் வடக்கு கடற்கரையை தாக்கியது சுனாமி: 5 பேர் பலி
சிலி நாட்டில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 8.2 ஆக பதிவானது. கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக, சிலியின் வடக்கு கடற்கரை பகுதியை சுனாமி தாக்கியது. மிகக் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டதும், சிலியின் வடக்கு கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத மதிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இதில் 5பேர் பலியானதாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.ஆரம்பத்தில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் 8.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் தெரிவித்தது. பிறகு இது 8.2 ஆக உயர்ந்ததாகவும், தொடர்ந்து அதிர்வலைகள் இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் ஏற்பட்டு 45 நிமிடத்தில் சுனாமி தாக்கியதாக சிலியின் கடற்படை தெரிவித்துள்ளது. குறைந்தது 2 மீட்டர் அளவுக்கு சுனாமி உருவாகும் என்று நிலநடுக்கம் ஏற்பட்டதுமே அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டிருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply