லுஃப்தான்ஸா வேலை நிறுத்தத்தால் பெரும் பாதிப்புகள்
ஜெர்மனியின் விமான நிறுவனமான லுஃப்தான்ஸா அடுத்த மூன்று நாட்களில் சுமார் 4000 சேவைகளை ரத்து செய்கிறது. பணி நிலைமகளை மேற்கோள்காட்டி, விமான ஓட்டிகள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாலேயே இந்த அளவுக்கு விமான சேவைகளை லுஃப்தான்ஸா ரத்து செய்கிறது. விமான ஓட்டிகளின் வேலை நிறுத்தம் காரணமாக 4000 விமான சேவைகள் ரத்தாவதால் பரந்துபட்ட அளவில் பயணத்தடைகள் பெருமளவுக்கு பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலை நிறுத்தம் மற்றும் விமான சேவைகள் ரத்து ஆகியவை காரணமாக, பயணம் மேற்கொள்ளவுள்ளவர்களை விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என லுஃப்தான்ஸா நிறுவனம் குறுந்தகவல் மற்றும் மின்னஞல் மூலம் அறிவுறுத்தியுள்ளது.
பயணத்துக்கு முன்னர் விமானம் ரத்தாகியுள்ளதா என்பதை அறிந்து கொள்ளுமாறும் பயணிகளுக்கு லுஃப்தான்ஸா கூறியுள்ளது. கடந்த பல மாதங்களாகவே விமான நிறுவனத்துக்கும் விமான ஓட்டிகளின் சங்கத்துக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த வேலை நிறுத்தம் காரணமாக லுஃப்தான்ஸா நிறுவனத்துக்கு பல மில்லியன் டாலர்கள் இழப்பு ஏறப்டக் கூடும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
தமது சரித்தரித்தில் இந்த அளவுக்கு விமானங்கள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் லுஃப்தான்ஸா கூறியுள்ளது. இந்த வேலை நிறுத்தம் மற்றும் விமான சேவைகள் ரத்தாவதன் காரணமாக 425,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply