அடாவடித்தனத்தின் உச்சகட்டம், சட்ட ரீதியாக அணுகுவேன் என்கிறார் : அமைச்சர் ரிஷாட்
பொதுபலசேனா அமைப்பினர் அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்மையானது அடாவடித்தனத்தின் உச்சகட்டமாகும். இதனை சட்ட ரீதியாக அணுகுவோம் என அமைச்சர் ரிஷாட் பதியுதின் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பினர் நேற்யை தினம் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்து தேடுதல் நடத்தியதையடுத்து அமைச்சிற்கு வருகைதந்திருந்த அமைச்சர் ரிஷாட் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று அமைச்சிற்குள் அனுமதியின்றி நுழைந்த பொதுபலசேனா அமைச்சினர் யாரோவொரு தேரர் இங்கிருப்பதாக தேடுதல்களை நடத்தித்தியுள்ளனர். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அவ்வமைப்பினர் தேடும் நபர் இங்கில்லை. எனினும் இதுவொரு அரச கட்டடம். அனுமதியில்லாமல் அத்துமீறி இதற்குள் நுழைந்து தேடுதல் நடத்துவதற்கு அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதற்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
என்னை அகௌரவப்படுத்துவதற்காக இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். தனிப்பட்ட முறையில் என்னை அகௌரவப்படுத்தினால் அதனை நான் ஏற்றுக்கொள்வேன். இருப்பினும் இது பொதுவான இடம். மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக இங்கு எந்நேரத்திலும் வருகை தருகின்றனர். அதற்கு இடையூறு அளிப்பதானது அடாவடித்தனத்தின் உச்ச கட்டமாகும். இவ்வாறு அமைச்சிற்குள் அத்து மீறி நுழைவானதானது நாட்டிற்கும் குறித்த அமைப்பிற்கும் நல்லதல்ல. இத்துடன் இத்தகைய எதேச்சதிகாரமான செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply