ஐ.நா. பேரவைகளில் சீனா இலங்கைக்கு தொடர்ந்தும் உதவும் சீன பிரதி வெளிவிவகார அமைச்சர்

ஐக்கிய நாடுகள் சபையின் பேரவை களில் இலங்கை க்கு சீனா தொடர் ந்தும் ஆதரவு வழங்குமென இலங்கை வந்துள்ள சீனப் பிரதி வெளிவிவகார அமைச்சர் லியு சென்மின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதி அளித்தார்.“ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆகிய வற்றில் இலங்கைக்கு நாம் தொடர்ந்தும் ஆதரவு அளிக்கும் அதேநேரம் இலங்கைக்கு எப்போதும் சீனா நண்பனாக செயற்படும் எனவும் சீனப் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

இவ்வருடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிற்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். ஜெனீவாவில் கடந்த மாதம் இலங்கைக்கெதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக சீனா வாக்களித்ததன் மூலம் இலங்கையின் இறைமை மற்றும் தேசிய பாதுகாப்பினை காப்பாற்றியுள்ளது.

கடந்த 30 வருட காலமாக துன்பத்தினை எதிர்நோக்கியிருந்த எமக்கு உங்கள் உதவியினால் தீவிரவாதத்தை தோற்கடிக்க முடிந்துள்ளது” என்றும் ஜனாதிபதி சீன பிரதியமைச்சரிடம் கூறினார்.

இதேவேளை இலங்கை – சீனா இருதரப்பு உறவுகள் மீது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டுள்ள தனிப்பட்ட ஆர்வத்திற்காக பிரதியமைச்சர் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“சீன தலைமைத்துவத்துடன் நீங்கள் மிக நெருக்கமான நட்பை நிலை நிறுத்திக் கொண்டுள்Zர்கள்” என சுட்டிக்காட்டிய லியு, இந்த தனிப்பட்ட உறவு சீனா – இலங்கையிடையிலான உறவுகளில் முக்கிய பங்கு வகிக்குமெனவும் கூறினார்.

சீனாவின் உதவியின் கீழ் இலங்கையில் குறிப்பிட்டுக் கூறும்படியான பல கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த தசாப்தங்களில் இலங்கை சீனாவுக்கு ஆற்றிய ஒத்துழைப்புகளுக்காக நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இலங்கையின் அபிவிருத்திச் செயற்திட்டங்கள், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் சீனா அதிக ஆர்வம் கொண்டிருப்பதாக லியு கூறினார்.

“உட்கட்டமைப்பு, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளை மேலும் மேம்படுத்துவதற்காக நாம் தொடர்ந்தும் ஒன்றிணைந்து வேலை செய்வோம் என நம்புகிறேன்” எனக் கூறிய எமது ஒன்றிணைப்பானது இன்னமும் உயர்ந்த மட்டத்தை அடைய வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply