இலங்கையில் ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்கிறது : பிரித்தானியா

உல­க­ளா­விய ஊடக சுதந்­திர பட்­டி­யலில் இலங்கை கீழ் நிலையில் இருப்­ப­தாக கூறப்­பட்­டுள்ள நிலையில், இலங்­கையில் ஊட­கங்கள் தொடர்ந்தும் அச்­சு­றுத்தல் மற்றும் துன்­பு­றுத்­தல்­களை எதிர்­நோக்கி வருவ­தாக கொழும்பில் உள்ள பிரித்­தா­னிய உயர்ஸ்தா­னி­க­ரா­லயம் தெரி­வித்­துள்ளது. இது குறித்து இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரன்கீன் கருத்துத் தெரிவிக் கையில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் தமது பணிகள் கார­ண­மாக உலகம் முழுவதும் அச்­சு­றுத்­தல்­களை எதிர்­நோக்கி வருகின்­றனர். அதேபோல் இலங்­கையில் பல ஊட­க­வி­ய­லா ளர்கள் கடி­ன­மான பின்­ன­ணியில் தமது பணி­களை மேற்­கொண்டு வருகின்றனர். இலங்­கையில்ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான அச்­சு­றுத்­தல்கள் மற்றும் துன்­பு­றுத்­தல்கள் தொடர்­கின்­றன.2000 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை­யான காலப் பகு­தியில் 9 ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­ட­துடன், அதற்­கான நீதி வேண்டி அவர்­களின் குடும்­பங்கள் இன்னும் காத்­துள்­ளனர் என பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் ஜோன் ரன்கின் தெரி­வித்தார்.
கடந்த கால குற்றச் செயல்கள் குறித்து விசா­ர­ணை­களை நடத்தி, ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பாது­காப்பு தொடர்பில் உறு­தி­யான கடப்­பாட்டை முன்­னெ­டுக்க இலங்கை அர­சாங்­கத்தை ஊக்­கு­விப்­ப­தா­கவும் அவர் கூறினார்.

நாம் பரந்த உலக மாற்­றத்­திற்கு மத்­தியில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம். செழுமை மற்றும் மனித உரி­மை­களை ஒரு­வ­ருக்கு ஒருவர் பரி­மா­றிக்­கொள்ள வேண்டும்.
இவ்­வா­றான ஜன­நா­யக சுதந்­திரம், சட்­டத்தின் ஆட்சி, கருத்துச் சுதந்­திரம், கலா­சார தொடர்பில் சமூ­கத்தின் ஊடான மாற்­றங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்க வேண்டும். இந்த ஜன­நா­யக மதிப்­புகள் தொடர்பில் எமது பங்­கா­ளர்­களும் உண்­மை­யாக இருக்க வேண்டும் என பிரித்­தா­னியா நம்­பு­கி­றது.

உலக ஊடக சுதந்திர தினத்தில் கருத்துச் சுதந்திரத்தை பின்பற்றுவதில் நாம் தமது உறுதிப்பாட்டை புதுப்பிக்க வேண்டும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply